நெட்டிசன்:

கணேஷ் படையாச்சி (Ganeshan Padaiyatchi ) அவர்களின் முகநூல் பதிவு:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் போராடும், நண்பர்களே..

ஏற்கனவே, அந்த எண்ணெய் கிணறு ( wellhead-Christmas Tree)  துருப்பிடித்துள்ளது. இதன் அடியில் இருக்கும் இயற்கை வாயு ( Natural Gas) வின் தன்மை தெரியவில்லை. எப்படியாயினும் இதில் இருந்து வரப்போவது, சீர்படுத்தப்டாத வாயு ( “untreated gas) . ஆக,  இருக்கும். இதில், எவ்வளவு சதவிகிதம், CO2, H2S இருக்கும் என்பது தெரியவில்லை.  இந்த இரண்டு வாயுக்களும்  உயிருக்கு ஆபத்தானவை.!

போராடுகிறேன் எனச்சொல்லிக்கொண்டு, இந்த எண்ணெய் கிணறை ( Christmas Tree)  செருப்பால் அடிப்பது, குச்சியால் அடிப்பது, கல்லால் அடிப்பது, கொடி கட்டுவது அனைத்தும் ஆபத்தானவை. அறியாமை. ஏனென்றால், இந்த  சீர்படுத்தப்படாத – சுத்திகரிக்கப்படாத –  கேஸ்  கசிந்து வெளியேறினால், தீப்பிடிக்க வாய்ப்பு உண்டு. உயிர் பலி ஏற்படும்.

ஆகவே, இந்த  எண்ணெய் கிறில் (Wellhead-Christmas Tree) இருந்து , இருபதடி தள்ளி நின்றே போராடுங்கள்.

அதுதான் பாதுகாப்பு!