குவைத்:
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், சமுக வளைதளங்களில் கமென்ட் போடுபவர்களை குவைத் அரசின் தீவிர கண்காணிப்பு பிரிவு கண்காணித்து வருவதாக ஆசியாநெட் செய்தி சேனல் செய்தி வெளியிட்டு உள்ளது.
குவைத் மீது கடந்த ரமலான் மாதத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதிச்செயல் குவைத் போலீசாரால் முறியடிக்கபட்டு 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை செய்ததிலும், அவர்களுடைய மொபைல் போனில் கிடைத்த தகவலின் அடிப்பபடையிலும் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான நபர்களை குவைத் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
சமுக வளைதளங்களில் தேவையில்லாமல் செய்யப்படும் ஒரு கமென்ட், லிங்க் கூட உங்களின் வாழ்க்கை பாதையை புரட்டி போட்டுவிடலாம், ஆகவே எச்சசரிக்கையாக இருக்கள் என குவைத் மக்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டு உள்ளது.
உலக அளவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு, இளைஞர்கள் பல்வேறு காரணங்களால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் குவைத்தில் இதனுடன் தொடர்புடைய 50 நபர்களின் அன்றாட நடவடிக்கைகள் ரகசிய பிரிவு போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
கண்காணிப்பில் இருப்பவர்கள்ள பலர் குவைத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஒருசிலர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை கைது செய்ய தகுந்த ஆதாரங்களை போலீசார் சேமித்து வருகின்றனர் என்றும், இந்த தகவலை குவைத் பத்திரிகை வெளியிட்டுள்ளதாக Asianet news செய்தி வெளியிட்டுள்ளது