SSB டாக்கீஸின் முதல் தயாரிப்பில், இயக்குநர் சாய் செல்வா இயக்கத்தில் ‘வார்டு-126’ எனும் திரைப்படம் உருவாகிறது. பெண்மையை மையப்படுத்தி விறுவிறுப்பான திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

SK சுரேஷ்குமார் ஒளிப்பதிவில், வருண் சுனில் இசையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் நாயகனாக மைக்கேல் தங்கதுரை, ஜிஷ்ணு மேனனும், நாயகிகளாக ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், ஸ்ரீமன், நிஷாந்த், தீபா ஷங்கர், வினோத் சாகர், கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசரை, இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் உட்பட பல பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]