டெல்லி:
ஈரான் அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் உருவாகி வரும் நிலையில், ஈரான், ஈராக், பாரசீக மற்றும் ஒமன் வளைகுடா பகுதிகளின் வான்வெளியை தவிருங்கள் என்று இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஈராக் தலைநகர் பாக்காத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, ஈரானின் படைத்தளபதி ஜெனரல் காசிம் சுலைமணி கடந்த வாரம் அமெரிக்க படைகளால் குண்டுவீசி கொல்லப்பட்டார். இது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு நட்புநாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
ஈரான் நாட்டின் அதிகாரம்மிக்க ஜெனரலாக இருந்த காசிம் சுலைமணி கொல்லப்பட்டது ஈரானில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் சர்வதேச அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசிம் சுலைமணி சாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த நிலையில், நேற்று காசிம் சுலைமணி அடக்கம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு, ஈரான் படைகள் ஏவுகணைகளைக் கொண்டு, ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு ஈராக் படைகள் பதிலடி கொடுத்தன. இதன் காரணமாக அங்கு எப்போது என்ன நடக்கும் என சூழல் ஏற்பட்டுள்ளது. போர் பதற்றமும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஈரான், ஈராக் மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா ஆகியவற்றின் வான்வெளியைத் தவிர்க்கும் இந்தியா தனது விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.