போரால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா திரும்புபவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டு வர மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒருமுறை சலுகை (one-time relaxation) அறிவித்துள்ளது.

முக்கிய அம்சங்கள்:

மத்திய கிழக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், தங்கள் நாய் மற்றும் பூனைகளை இந்தியாவுக்கு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக தேவையான export விதிமுறைகள் (pre-export formalities) இந்த அவசர சூழலில் இல்லாவிட்டாலும் அனுமதி வழங்கப்படும்.

இதற்கான வழிகாட்டுதலை கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை (DAHD) வெளியிட்டுள்ளது.

விதிமுறைகள்:

அந்த செல்லப்பிராணி குறைந்தது ஒரு மாதம் உரிமையாளருடன் இருந்திருக்க வேண்டும்

தடுப்பூசி சான்றுகள் (pet passport / vaccination certificate போன்றவை) இருப்பின் அதைக் காண்பிக்க வேண்டும்.

தடுப்பூசி பதிவு இல்லாவிட்டாலும், இந்தியா வந்ததும் மருத்துவ பரிசோதனை

நாய்க்காய்ச்சல் (rabies) தடுப்பூசி போடப்பட்டு அனுமதி வழங்கப்படும்

இறுதி அனுமதி:

விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவைகள் (AQCS) மூலம் இறுதி அனுமதி வழங்கப்படும்

[youtube-feed feed=1]