ஹேக்

போர்க்குற்றவாளி ஒருவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பே விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்

கடந்த 1992-95 ஆம் வருடம் நடைபெற்ற போஸ்னியா போரின் சமயத்தில் குறிப்பிட்ட இனத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு ஒன்று ஐ நா சபையிடம் அளிக்கப்பட்டது.  சுமார் 10000 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக எழுந்த இந்த வழக்கை ஐ நா தீர்ப்பாயம் ஒன்று விசாரித்தது.  இந்த போர்க் குற்றத்துக்கு காரணமான பொஸ்னியா நாட்டின் அப்போதைய ராணுவ தளபதி ஸ்லொபதன் ப்ராஜ்லக் உள்பட 6 பேருக்கு தீர்ப்பாயம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் மேல் முறையீடு ஒன்று அளிக்கப்பட்டது.   சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்குப் பிறகு போர்க்குற்றவாளி என நிரூபணம் ஆகி விட்டதால் ஸ்லோபதன் ப்ராஜ்லக்குக்கு அளிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்தது.  அப்போது நீதிமன்றத்தில் இருந்த ப்ராஜ்லக் தனது கையில் இருந்த ஃப்லாஸ்க்கில் இருந்து ஒரு திரவத்தை குடித்தார்.

அதன் பிறகு ப்ராஜ்லக் நீதிபதியை பார்த்து, “நான் போர்க் குற்றவாளி இல்லை. இந்த தண்டனையை நான் எதிர்க்கிறேன்.  நான் இப்போது விஷம் குடித்துள்ளேன்.” எனக் கூறியவாறு  அருகில் இருந்த நாற்காலியில் சாய்ந்துள்ளார்.  உடனடியாக முதலுதவி அளித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.   இது குறித்து ஹேக் நகர போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

[youtube https://www.youtube.com/watch?v=PYW2awwxnn0]