கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி உக்ரைனின் செவரோடோனெட்ஸ்க் நகரத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மரியுபோலுக்குப் பிறகு ரஷ்யாவின் மிகப்பெரிய வெற்றி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போர் தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது. தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா முயற்சித்து வருகிறது. குறிப்பாக டான்பாஸ் பிராந்தியத்தை முற்றிலும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர தீவிரம் காட்டி வருகின்றன. அங்குள்ள செவரோடோனெட்ஸ்க் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் சில வாரங்களாக கடும் தாக்குதல் நடத்தி வந்தன. கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த நிலையில் அந்நகரை ரஷிய ராணுவம் முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. வாரக்கணக்கான தெருச் சண்டைகளுக்குப் பிறகு நகரத்தின் வீழ்ச்சி உக்ரைனின் கிழக்கில் உள்ள போர்க்களத்தை மாஸ்கோவிற்கு சாதகமாக மாற்றி உள்ளது. மரியுபோலுக்குப் பிறகு ரஷ்யாவின் மிகப்பெரிய வெற்றி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யப் படைகள் கிழக்கு பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்கி வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான செவரோடோனெட்ஸ்க் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் சில வாரங்களாக ஏவுகணை மூலம் கடும் தாக்குதல் நடத்தி வந்தன. இதனையடுத்து செவரோடோனெட்ஸ்க் நகரை ரஷ்யா ராணுவம் முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று அப்பகுதி மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரிக் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்வில் பகுதியில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் மீது ரஷ்யா குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.