அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி

Must read

டப்ளின்:
யர்லாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை பெய்ததால், ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இதையடுத்து 12 ஓவர் என்ற அளவில் ஆட்டம் குறைக்கப்பட்டது.

பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. 108 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணி 9.2 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இரு அணிகள் இடையேயான இரண்டாவது T-20 போட்டி நாளை இரவு 9 மணிக்கு நடக்க உள்ளது.

More articles

Latest article