டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வஃபு வாரிய மசோதா மாநிலங்களையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு தமிழ்நாட்டில் உள்ள தமாகா தவிர அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விரைவில் பாஜகவுடன் கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்படும் பாமக, அதிமுக மசோதாவுக்கு எதிர்த்து வாக்களித்தது.
வஃபு வாரிய சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து வக்ஃப் வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மத்தியஅரசு வஃபு வாரிய திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறுவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விதி சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதை கண்டுகொள்ளாத பாஜக அரசு, 3/04/25 அன்று வஃபு திருத்த மசோதாவை அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜு மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து மசோதா மீது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. சுமார் 12மணி நேர விவாதத்திற்குப் பிறகு, நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மசோதா 288-232 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து நேற்று பிற்பகல் மாநிலங்களைவில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த மசோதா மீது கடுமையான விவாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில், பாஜக ஆதரவாளரான ஜி.கே.வாசன் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார். ஆனால், மற்றொரு கூட்டணி எம்பி.யான பாமக எம்.பி. . அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதுபோல, அதிமுகவும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது. அதிமுக எம.பி.க்களான தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் 4 பேரும் மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பு.
இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில், மொத்தமாக 128 பேர் ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து, மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றியது. மக்களவையில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் நிறைவேறிய வக்பு வாரிய மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதால், விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.