டெல்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வஃபு வாரிய திருத்த மசோதா மக்களவையில் சுமார் 12மணி நேரம் நடைபெற்ற காரசாரமான விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று பிற்பகல் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
சர்ச்சைக்குரிய உள்ள வஃபு வாரிய திருத்த மசோதாவை அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜு நேற்று (3/04/25) மக்களவையில் தாக்கல் செய்து பேசினார். அப்போது, “வக்ஃப் வாரியத்தின் விதிகள் எந்த மசூதி, கோயில் அல்லது மத தளத்தின் நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது வெறுமனே சொத்து மேலாண்மை தொடர்பான விஷயம். இருப்பினும், வக்ஃப் சொத்துக்கள் வக்ஃப் வாரியம் மற்றும் முத்தவல்லியால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அடிப்படை வேறுபாட்டை யாராவது புரிந்து கொள்ளத்தவறினாலோ அல்லது வேண்டுமென்றே செய்யாமல் இருந்தாலோ, அதற்கு என்னிடம் எந்த தீர்வும் இல்லை” என்றார்.
இதையடுத்து மசோதா மீது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. 8 மணி நேரம் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், சுமார் 12மணிநேரம் விவாதம் நடைபெற்றது. இந்த மசோதா மீது அரசாங்கமும், எதிர்க்கட்சியும் நள்ளிரவு தாண்டியும் தங்களது ஆவேசமான கருத்துக்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, வக்பு திருத்த மசோதா, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிரான 232 வாக்குகளும் கிடைத்தது. இதனால், மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இன்று பிற்பகுதியில் மாநிலங்களவையில் வஃபு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அங்கு இன்று விவாதங்கள் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
முன்மொழியப்பட்ட வஃபு வாரிய திருத்த சட்டம், வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்கும் 1995 ஆம் ஆண்டு சட்டத்தை திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மசோதா மாநிலங்களைவையிலும் நிறைவேற்றப்பட்டால், உடனே குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அமலுக்கு வரும்.
https://patrikai.com/the-waqf-board-bill-was-passed-at-2-am-today-after-12-hours-of-heated-debates/https://patrikai.com/the-waqf-board-bill-was-passed-at-2-am-today-after-12-hours-of-heated-debates/