சென்னை:
காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று மின் வாரிய ஊழியர்கள் அரசை எச்சரித்த நிலையில், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு கோரி தமிழக மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கடந்த 16-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காவிட்டால் தொடர் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மின் வாரிய ஊழியர்களுக்க 2.57 காரணி ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி இரு தரப்பினரிடையே இது குறித்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின்வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு விலக்கி கொள்ளப்படும் என தெரிகிறது.