மும்பை
யெஸ் வங்கி மோசடியில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் வாத்வான் குடும்பத்தினர் ஊரடங்கு விதிகளை மீறியதாக மகாராஷ்டிர அரசு குற்றம் சட்டி உள்ளது.
யெஸ் வங்கியில் கடன் வாங்கி திருப்பித் தராத நிறுவனங்களில் அதிகத் தொகை திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் நிறுவனம் அளிக்க வேண்டி உள்ளது. இதனால் அந்த நிறுவன உரிமையாளர் கபில் வாத்தாவான் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கபில் வாத்வான் மற்றும் அவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர் ஆகிய 23 பேருக்கு மகாராஷ்டிர மாநில சிறப்புத் தலைமைச் செயலர் அமிதாப் குப்தா கண்டலாவில் இருந்து மகாபலேஷ்வரர் பகுதியில் உள்ள அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கி உள்ளார்.
கபில் வாத்வான் மற்றும் அவர் குடும்பத்தினர் மொத்தம் ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அனுமதி அளித்த அமிதாப் குப்தாவை விடுப்பில் செல்ல உத்தரவு இடப்பட்டுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், “வாத்வான் குடும்பத்தை சேர்ந்த 23 பேர் கண்டாலாவில் இருந்து மகாபலேஸ்வரருக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு அனுமதி அளித்தது குறித்து விசாரணை நடைபெற உள்ளது “என டிவிட்டரில் அறிவித்துள்ளார்.