அகமதாபாத்:
மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடு நடந்த ‘வியாபம்’ ஊழல் போல் குஜராத் மருத்துவக் கல்லூரிகளிலம் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குஜராத் அரசு மருத்துவ கல்லூரியிலும் வியாபம் ஊழல் போல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தவில் தேர்ச்சி பெறாத 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இக்கல்லூரி பட்டம் வழங்கியிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கண் டுபிடிக்கட்டுள்ளது.
இது குறித்த புகார்கள் பிரதமர், முதல்வர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஜனவரியில் குஜராத் பல்கலைக்கழகத்துடன் இணைந்த முதுகலை மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. பிஜே மற்றும் என்ஹெச்எல் கல்லூரிகளில் உள்ள 300 சீட்களுக்கு நடந்த தேர்வில் 900 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் சுகாதார துறை டாக்டர்கள், அதிகாரிகள் விதிகளை மீறி அவர்களது நண்பர்களின் வாரிசுகளுக்கு சீட் வழங்கியுள்ளனர்.
இந்திய மருந்துவ குழு வழிகாட்டுதலின் படி நுழைவு தேர்வுக்கு வராத அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு முதுகலை மருத்துவ கல்வியில் சேர்க்க கூடாது. விதியை மீறி போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு இந்திய மருத்துவ குழுவுக்கு அனுப்பி பிரபலங்களின் வாரிசுகளுக்கு சீட் அளிக்கப்பட்டுள்ளது.
நுழைவு தேர்வு கூட எழுதாதவர்களுக்கு சீட் வழங்கப்படடுள்ளது. ஆனால், அவர்கள் தேர்ச்சி பெற்றதாக பதிவேடுகள் தற்போது வரை உள்ளது. சில சேர்க்கைகளுக்கு போலி ஜாதி சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட்டு இந்திய மருத்துவ குழுவை தவறாக வழிநடத்தியுள்ளனர். இந்த வழியை பயன்படுத்தி அரசு அதிகாரிகள் மற்றும் பிரபல டாக்டர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளிக்கப்பட்ட மனு பதில் மூலம், நுழைவு தேர்வில் 41 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள ஒரு மாணவரின், இந்திய மருத்துவ குழு பதிவேட்டில் 53 சதவீதம் என்று உள்ளது. அதேபோல் தேர்வில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்களை விட கூடுதலாக பதிவேட்டில் காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில சுகாதார ஆணையர் குப்தா கூறுகையில்,‘‘இது குறித்த புகார் வந்தள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள பழைய பதிவேடுகளை சோதனை செய்ய வேண்டும். புகார் குறித்து பரிசீலனை செய்து பின்னர் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம்’’ என்றார்.