கமதாபாத்

குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது நேற்று ஒருசில வாக்கு ஒப்புகை இயந்திரங்களுடன் வாக்களிப்பு இயந்திர முடிவுகளை சோதித்ததில் இரண்டும் ஒத்துப் போனதாக தகவல்கள் வந்துள்ளன.

குஜராத் தேர்தலில் முழுக்க முழுக்க வாக்களிப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டன.  அதே போல அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் பயன்படுத்தப் பட்டது.    வாக்களிப்பு இயந்திரத்தில் எந்த சின்னத்துக்கு வாக்கு பதிவாகி உள்ளது என்னும் விவரத்துடன் வாக்காளர்களுக்கு இந்த இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை வழங்கும்.     தேர்தல் நடைபெற்ற 50128 வாக்குச் சாவடிகளிலும் இந்த ஒப்புகைச் சீட்டு இயந்திரம் பொருத்தப் பட்டு இருந்தது.

நேற்று வாக்கு என்ணிக்கை நடை பெறும் போதே ஒரு சில வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும்,  வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் சோதித்துப் பார்க்கும் பணி நிகழ்ந்தது.   அந்தச் சோதனையில் இரு முடிவுகளும் ஒத்துப் போனது தெரிய வந்துள்ளது.