
தமிழகத்தில் இன்று (நவம்பர் 10) முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ‘தாராள பிரபு’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ மை கடவுளே’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன.
வி.பி.எஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், புதிய படங்கள் எதுவும் வெளியாகாது என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அறிவித்தார்.
@QubeCinema announces 100% waiver of VPF for new movie releases to support Producers and Exhibitors post lockdown. pic.twitter.com/Jpo4NaMP67
— Qube Cinema (@qubecinema) November 10, 2020
இந்நிலையில், நேற்றிரவு (நவம்பர் 10) க்யூப் நிறுவனத்துக்குப் போட்டி நிறுவனமான யூ.எஃப்.ஓ, நவம்பர் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் இலவசம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் க்யூப் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.
நவம்பர் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் தேவையில்லை என்று இன்று (நவம்பர் 10) க்யூப் நிறுவனமும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
[youtube-feed feed=1]