பாட்னா: பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று மாநிலத்தின்  71 தொகுதிகளில் வாக்குப்பதிவு  விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

243 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  முதல்கட்ட தேர்தல் இன்று (அக்டோபர் 28) ந்தேதி 1 தொகுதிகளில் தொடங்கி உள்ளது.  2வது கட்ட தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதியும், மூன்றாவது கட்ட தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவையில் 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஐக்கிய ஜனதா தளம் -பாஜக கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவையொட்டி,  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கை 1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டோர், கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு, மாற்று நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கூட்டணிகள் போதும் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பது அடுத்த மாதம் 10ந்தேதி தெரிய வரும்.

நாட்டில் கொரோனா பொதுமுடக்க சூழலுக்கு பிறகு முதல் முறையாக தேர்தல் நடைபெறுவதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.