டெல்லி:  18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8.45மணி அளவில், மத்தியில் பாஜக முன்னிலையிலும், மாநிலத்தில் திமுக கூட்டணி முன்னிலையும் வகித்து வருகிறது.

நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை  தேர்தல்  நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காலை 8.47 மணி வரை தேர்தல் ஆணையத்தின் ஆரம்ப நிலைகளின்படி, பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதுபோல மத்தியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.  ஊடகங்களின் தகவல்களின்படி, பாஜக கூட்டணி 271 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும், இண்டியா கூட்டணி 178 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தேர்தலில் வெற்றிபெறுவோம் என பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியும் கூறி வரும் நிலையில், மத்தியில் ஆட்சி  அமைக்கப்போவது யார்?  என்ற எதிர்பார்பப்பு மக்களிடையே எழுந்துள்ளது.