டில்லி:

த்திய நிதி அமைச்சராக முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொறுப் பேற்ற நிலையில், நிதித்துறை அமைச்சகத்தில் 12 உயர் அதிகாரிகள் விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்று மீண்டும் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி அமைச்சரவை பதவி ஏற்றது. இதில், மத்திய நிதி அமைச்சராக முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தற்போது பட்ஜெட் தொடர்பாக பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் தொடர்பாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம் என  நிர்மலா சீத்தாராமன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில்,  மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரிகள் 12 பேர் அதிரடியாக விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அதிரடி நடவடிக்கையால் நிதியமைச்சகமே பரபரப்பில் உள்ளது.

இந்த உயரதிகாரிகள் எதற்காக விருப்ப ஓய்வுக்கு தள்ளப்பட்டனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்றாலும் வெகுவிரைவில் இதுகுறித்த செய்திகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமரும்  இந்திராகாந்திக்கு பின் பொறுப்பேற்ற முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.