சென்னை,
ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரசார் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று ஆட்சிதலைவர் அலுவலகம் முன்பு மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் .திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு , பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததை கண்டித்து, வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ்இ.ளங்கோவன், கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், செயல் வீரர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.