பாட்னா: மக்களவைத் தேர்தலில் பீகாரில் மிக மோசமான தோல்வியை சந்தித்ததிலிருந்து, காங்கிரஸ் உடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டுமென, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒரு கட்சியாக ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடனான உறவை துண்டிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு ஜனதாதளத்திலிருந்து பிரிந்துவந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம், 1998 தேர்தலில் 17 இடங்களையும், 1999 தேர்தலில் 7 இடங்களையும், 2004ம் ஆண்டு தேர்தலில் 22 இடங்களையும், 2009 மற்றும் 2014 தேர்தலில் தலா 4 இடங்களையும் பெற்றது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 19 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி, தனியே 11 முதல் 12 இடங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் ஒரு இடத்தைக்கூட ஜெயிக்க முடியவில்லை.

அக்கட்சியின் வரலாற்றிலேயே இதுதான் மிக மோசமான நாடாளுமன்ற தோல்வி. எனவே, இந்தப் பின்புலத்தில்தான் காங்கிரசுடன் உறவை துண்டிக்க வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]