புதுடெல்லி: முந்தைய காலத்திற்கும் சேர்த்த வரி தொடர்பான வழக்கில், இந்திய வரித்துறைக்கு எதிராக வெற்றிபெற்றுள்ளது பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த வோடஃபோன்.
ஹாலந்து நாட்டின் த ஹேக் நகரில் அமைந்த நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், வோடஃபோன் நிறுவனம் வெற்றி கண்டுள்ளது. இந்தியாவின் வரித் துறை, நடுநிலையான மற்றும் சமத்துவமான செயல்பாட்டை இந்தப் பிரச்சினையில் மேற்கொள்ளவில்லை என்று தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும், வோடஃபோன் நிறுவனத்திற்கு ஆதரவான தீர்ப்பே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம், வோடஃபோன் நிறுவனத்திற்கு ரூ.40.3 கோடி இழப்பீடு தர வேண்டுமென்று உத்தரவிட்டது.
இந்நிலையில், வரி சச்சரவை தீர்ப்பதற்கான நீதிபதியை தேர்வுசெய்யும் விஷயத்தில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், சர்வதேச நீதிமன்றத்தை, கடந்த 2016ம் ஆண்டு அணுகியது வோடஃபோன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.