சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் விடுதலைக்கான உழைத்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் முக்கியமானவர். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.
அவரது, பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பமுடுகிறது. இன்று வ.உ.சியில் 152-வது பிறந்தநாள். இதையொட்டி, அவரது திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி. திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் முதலமைச்சர் மரியாதை செய்தார். அவருடன் அமைச்சர்கள் அமைச்சர் பெரியகருப்பன், எ.வ.வேலு, சேகர்பாபு, சக்கரபாணி, மதிவேந்தன், சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோரும் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.