தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார்.

அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் விவேக் அளித்த கடைசி வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் ஐபிஎஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்களால் அழாமல் இருக்க முடியவில்லை. திருப்பத்தூரில் இருக்கும் கல்லூரி ஒன்றின் மாணவ, மாணவியருக்கு விவேக் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்.