சென்னை: மறைந்த நடிகரின் உடல்  காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என  தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.நடிகர் விவேக் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  விவேக் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தமிழகஅரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை கோரியது.  தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதும்,  நடிகர் விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவரின் கலை மற்றும் சமூகச் சேவையினை கெளரவிக்கும் விதமாகவும், விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.