டிக்கடி உடல் நலம் குன்றுதல் அல்லது நோய் தொற்று , கடுமையான சோர்வு,எலும்பு மற்றும் முதுகு வலி, மனச்சோர்வு, காயங்கள் ஆறுவதில் சிரமம், எலும்பு தேய்மானம், முடி உதிர்வு, தசை வலி போன்ற பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால் எளிதாக சொல்லிவிடலாம் உங்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கிறது என்று

விட்டமின் டி யில் இரண்டு வகை உண்டு. விட்டமின் டி2 மற்றும் விட்டமின் டி3.

விட்டமின் டி3 தான் சூரியனிடமிருந்து நம் உடலுக்குக் கிடைக்கக்கூடியது.

விட்டமின் டி2 உணவுகள் மற்றும் மாத்திரைகள் வாயிலாக எடுத்துக்கொள்ளலாம்

அமெரிக்காவில் American Society of Clinical Oncology எனும் அமைப்பில் வருடாந்திர கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வில்  79,000  பேரிடம் கடந்த மூன்று வருடமாக நடந்த ஆய்வில் விட்டமின் டி மரணத்தை தள்ளிப் போடுகிறது என்றும், கேன்சர் எனும் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது என்றுமம் அந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுமட்டுமல்ல பல நோய்கள் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது. எனவே நம் உடலுக்கு விட்டமின் டி மிக அவசியம், ஆனால்  முக்கியமான விசயம் என்ன தெரியுமா?

உலகிலயே எந்த செலவும் இல்லாமல் கிடைக்கும் ஒரே சத்து இந்த விட்டமின் டி, நேரடியாக சட்டைய கழட்டிட்டு, தலைக்கு ஒரு துணியை மாட்டிக்கிட்டு உடம்பெல்லாம் வெயில்படும்படி உட்கார்ந்தால் நம் உடம்பே கிரகத்திடும் விட்டமின் டி யை.

குறிப்பாக இந்தியர்களுக்கு இந்த விசயம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் , பூமத்திய ரேகைக்கு அருகில் வாழ்வதால், எல்லா காலங்களிலும் வெயில் நமக்கு எப்படியும் கிடைக்கும். கிடைத்து என்ன பிரயோசனம் இந்திய மக்கள் தொகையில் 40%க்கும் மேல் விட்டமின் டி பற்றாக்குறையில் இருக்கிறார்களாம்

https://play.google.com/store/apps/details?id=com.ontometrics.dminder

இந்த செயலியை உங்கள் மொபைலில் நிறுவிக்கொண்டு  உங்கள் இடத்திற்கு ஏற்றார்ப்போல் எப்போது விட்டமின் டி முழுதாக கிடைக்கும் என்று பாருங்கள். அந்த நேரத்தில் 20 நிமிடம் நின்றால் போதும். உங்களுக்குத் தேவையான விட்டமின் கிடைத்துவிடும்

ஆனால் மற்றவர்கள் காலம் காலமாக ஏமாற்றுவதுபோல் காலை இள வெயிலில் நிச்சயம் விட்டமின் டி அதிகமாக கிடையாது என்பதை மட்டும் மனதில் வையுங்கள், 10 மணிக்கு ஆரம்பித்து வெயில் உச்சியில்தான் விட்டமின் 3 அதிகமாக கிடைக்கும்

– செல்வமுரளி