ஏர் இந்தியாவுடனான இணைப்பு முழுமையடைந்ததை அடுத்து இன்றுடன் தனது பயணத்தை விஸ்தாரா விமான நிறுவனம் நிறைவு செய்கிறது.
டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிதிப்பங்கீட்டில் செயல்பட்டு வந்த விஸ்தாரா விமான நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து இன்று தனது இறுதி விமானத்தை இயக்குகிறது.
நவம்பர் 12 முதல், விஸ்தாராவின் செயல்பாடுகள் ஏர் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்படும், இது ஏர் இந்தியாவின் கீழ் ஒருங்கிணைந்த சேவையாக மாறவுள்ளது.
ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவை இணைப்பதன் மூலம், ஒருங்கிணைந்த விமான நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 25.1 சதவீத பங்குகள் வழங்க 2022 நவம்பர் மாதம் தீர்மானம் செய்யப்பட்டது.
ஏர் இந்தியா-விஸ்டாரா இணைப்பில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
2015ம் ஆண்டு துவங்கப்பட்ட விஸ்தாரா விமான போக்குவரத்து நிறுவனம் இன்று ஏர் இந்தியாவுடன் இணைவதால், இந்தியாவில் விமான சேவை வழங்கும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 17 ஆண்டுகளில் ஐந்தில் இருந்து ஒன்றாகக் குறைந்துள்ளது.
இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை கடந்த 2012ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி அனுமதித்த நிலையில், கிங்பிஷர் மற்றும் ஏர் சஹாரா போன்ற விமான நிறுவனங்கள் காலப்போக்கில் சேவையை நிறுத்திக் கொண்டது, கடைசியாக 2019ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் தனது சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.