டில்லி

ராமர் கோவில் கட்ட நிதி ஏதும் வசூலிக்கவில்லை என விஸ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.   இந்த ராமர் கோவில் அமைப்பில் விஸ்வ இந்து பரிஷத் முன்னிலை வகித்து வருகிறது.    சமீபத்தில் இந்த ராமர் கோவில் அமைப்பது குறித்த விவரங்களை வி. இ. ப. வெளியிட்டது.

இந்நிலையில் ராமர் கோவில் அமைக்க வி இ ப நிதி திரட்டி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக வி. இ. ப. அளித்துள்ள அறிக்கையில், “ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வி இ ப நிதி வசூலிப்பதாக வந்த தகவல் தவறானது.  நாங்கள் இதுவரை ராமர் கோவில் கட்டும் நிதியை வசூலிக்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

அது மட்டுமின்றி இப்போதும் எவ்வித நிதி வசூலிலும் வி. இ. ப. ஈடுபடவில்லை.   இனியும் கோவில் கட்ட நிதி வசூலிக்க வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு கிடையாது என்பதை நாங்கள் இந்த அறிக்கையின் மூலம் தெளிவு படுத்துகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.