காதல் மனைவி ரஜினி நட்ராஜை பிரிந்த பிறகு விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வருகிறார்.

விஷ்ணு விஷாலும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஹைதராபாத் சென்று ஜுவாலாவை சந்திக்கிறார். லாக்டவுன் நேரத்தில் தான் அவர்களுக்கு நிச்சயம் நடந்தது.

பிரபு சாலமன் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் காடன் படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் விஷ்ணு விஷால். அப்பொழுது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது பொறுமையாக பதில் அளித்தார்.

இந்நிலையில் தனக்கும், ஜுவாலாவுக்கும் விரைவில் திருமணம் என்றும், தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.