அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.
இந்நிலையில் FIR பட இயக்குனரை பாராட்டி பதிவு செய்துள்ளார் விஷ்ணு. சீக்கிரமாவே இவரோட திறமைய பார்த்து பாராட்டுவீங்க என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் மனு ஆனந்தின் பிறந்தநாள் என்பதால் வாழ்த்து தெரிவித்தும் பதிவு செய்துள்ளார் விஷ்ணு விஷால் .