நடிகர் விஷால், ராஷிகண்ணா நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கி வரும் ‘அயோக்யா’ படத்தின் டீசர் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.
இந்த படத்தில் விஷால் போலீஸாக மீண்டும் மாஸ்காட்டியுள்ளார். அவருக்கு வில்லனாக, பார்த்திபன் நடித்து உள்ளார்.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘டெம்பர்’. படத்தின் ரீமேக்கே அயோக்யா. இதில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார், அவருடன் ராஷி கண்ணா, கே எஸ் ரவிக்குமார், பூஜா தேவரியா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
சில பேருக்கு பொம்பள மேல ஆசை, சில பேருக்கு பதவி மேல ஆசை ஆனா எனக்கு மனசு மேல ஆசை என்ற விஷாலின் அனல் தெறிக்கும் வசனம் படத்துக்கு மெருகூட்டுகிறது.