நடிகர் விஷால் தனது திருமணம் தேதியை வெளியிட்டுள்ளார். விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் அறிவித்திருந்தார். அதன்படி, கட்டிடம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
விஷால் அறிவித்தபடி, நடிகர் சங்க கட்டிடத்தில் என்றால், அங்கு நடக்கும் முதல் திருமணம் விஷாலின் திருமணமாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.