ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனமே, இந்தப் புதிய படத்தையும் தயாரிக்கவுள்ளது.
விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தற்போது விஷாலுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.