விஷாலின் ‘ஆக்சன்’ திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ’சக்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் கவுதம்மேனன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

எம்.எஸ் ஆனந்தன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்ட்ரி தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் விஷாலுடன் ரெஜினா, ஷ்ரதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ரோபோசங்கர் நடிக்கவுள்ளார்.

[youtube-feed feed=1]