ஜோதி பால பத்ரகாளியம்மன் திருக்கோயில்,  விலாங்குளம், விருதுநகர்.

தல சிறப்பு :

சிவராத்திரி இரவு லலிதா சகஸ்ரநாமமும் அதிகாலையில் அன்னதானமும் நடைபெறுவது சிறப்பு.

பொது தகவல் :

சர்வ சக்தி விநாயகர், முருகப் பெருமான் விஷ்ணுதுர்க்கை, வீரபத்திரர் முற்றும் நவக்கிரகங்களுக்கும் சன்னதிகள் உள்ளன.

தலபெருமை :

ஜோதி பால பத்ரகாளியம்மன் மிகுந்த விரப்பிரசாதி வேப்ப டலை. கீழாநெல்லி இலை, அரச இலை ஆகிய மூன்று இலைகளையும் அம்மனின் திருப்பாதத்தில் வைத்து எடுத்து பிறகு சாறு எடுத்து அறந்தினால் விரைவில் பிள்ளை பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். தாமரைப் பூவால் அம்மனை அர்ச்சித்து வேண்டினால் விரைவில் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் இங்கு நடைபெறும் கோபூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் தங்கும். லட்சுமி கடாட்சத்துடன் வாழலாம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

மாசி மகமும் மகா சிவாரத்திரி நன்னாளும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன மகா சிவராத்திரி நாளில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அழகுறக் காட்சி தருவாள், தேவி அப்போது லலிதா சகஸ்ரநாம பாராயணம் தொடர்ந்து நடைபெற அர்ச்சனை நடந்துகொண்டே இருக்கும் இன்னொரு பக்கத்தில், அரிசியை வடித்து நைவேதித்தியத்துக்கு வைத்திருப்பார்கள்.

அதிகாலை 3 மணிக்கு மகா சிவராத்திரி பூஜைகள் முடிந்து, பிறகு பிரம்ம முகூர்த்த வேளையில் அனைவருக்கும் சுடச்சுட அன்னதானம் நடைபெறும். மகா சிவராத்திரியன்று அம்மனை தரிசித்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டால், வழக்கில் வெற்றி, கல்வியில் மேன்மை, குடும்பத்தில் நிம்மதி உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள்.

தல வரலாறு :

ஆலயத்தின் சர்வ சக்திவிநாயகர், தன்னைத்தானே நிர்மாணித்துக் கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. அதாவது, யானையானது தன் துதிக்கையால் விநாயகரின் விக்கிரகத் திருமேனியை எடுத்து வைத்ததாகச் சொல்வர் இவரை சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்கினால் சங்கடங்கள் அனைத்தும் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

திருவிழா :

மாசி மகம், சிவராத்திரி, ஆடி வெள்ளி.

பிரார்த்தனை :

திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

எலுமிச்சை மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.