திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவில் கணினியையும்  வைரஸ் தாக்கி உள்ளதாக தேவஸ்தானம் கூறி உள்ளது.

தற்போது உலகம் முழுவதும் உள்ள கணினிகள்  ரான்சம்வர் என்ற  வைரஸ் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

இந்தியாவிலும் ஐடி நிறுவனங்கள், கேரள அரசு நிறுவனங்களின் கணினிகள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாக அலுவலகத்தில் உள்ள கணினியும் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது.

தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள கணினிகள்  20-க்கும் மேற்பட்ட கணினிகள்  வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் காரணமாக  நிர்வாகம் சார்ந்த தகவல்கள் முற்றிலுமாக அழிந்ததுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதன் காரணமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை திருப்பதி தேவஸ்தான  செயல் அலுவலர் கூறியுள்ளார்.