2018ம் ஆண்டு சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பி கிரேட் திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. அதில் கதாநாயகனாக சந்தோஷ் ஜெயக்குமாரே நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் டீசர் ஆகியவை சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதில் ஆபாசம் அதிகமாக இருப்பதாக் சொல்லி படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களை இணையத்தில் இருந்து நீக்கவேண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 3 பாடல்கள் வெளியாகின. இந்நிலையில் 4வது பாடலான வெர்ஜினிட்டி பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று சந்தோஷ் ஜெயகுமார் தெரிவித்தார். அதன்படி வீடியோ வெளியாகியுள்ளது.