2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நாளை அகமதாபாத் நகரில் துவங்க உள்ளதை அடுத்து “உலக கோப்பை தொடரைப் பார்க்க டிக்கெட் கேட்டு தயவுசெய்து தொந்தரவு செய்யவேண்டாம்” என்று விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அகமதாபாத், ஹைதராபாத், தர்மசாலா, மும்பை, புனே, சென்னை, கொல்கத்தா, டெல்லி, லக்னோ மற்றும் பெங்களூரு என மொத்தம் 10 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டித் தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நாளை அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய பத்து அணிகள் மோத உள்ளன.

ஒவ்வொரு நகரிலும் இந்திய அணி கலந்து கொள்ளும் ஒரு போட்டி இடம்பெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில், “நண்பர்கள் யாரும் இந்த தொடருக்கான டிக்கெட் கேட்டு என்னை தயவு செய்து தொந்தரவு செய்யவேண்டாம். டிக்கெட் கிடைக்காதவர்கள் வீட்டில் இருந்து போட்டியை காணுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.