டில்லி,
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் ஹனிமூன் சென்றுள்ளனர். இந்நிலையில், இருவரும் இணைந்து தேனிலவு கொண்டாடி வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் இருவரும் இத்தாலியில் உள்ள டஸ்கன் ரிசார்டில் முக்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமண வரவேற்பு, வரும் 21-ஆம் தேதி டில்லியிலும், 26-ம் தேதி மும்பையிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தற்போது தேனிலவில் உள்ள புதுமணத் தம்பதியினர் தாங்கள் எடுத்துள்ள செல்பி படத்தை வெளி யிட்டுள்ளனர்.
விராட்கோலியின் மனைவி அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராமில் இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தாங்கள் சொர்க்கத்தில் இருக்கிறோம் என்றுஇ பதிவிட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் திருமணத் தம்பதிகளை வாழ்த்தி உள்ளனர். மேலும் சிலர் கலாய்த்தும் வருகின்றனர்.
இந்தப் புகைப்படம் வெளியான 2 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.