மும்பை: புதிய இந்திய மனப்பாங்கை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், ஒரு நவீனகால நாயகனாக திகழ்கிறார் விராத் கோலி என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ்.
“எதுவுமே சாத்தியமற்றது அல்ல” என்று நினைக்கும் மனோநிலையைத்தான் ஸ்டீவ் வாஹ் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “ஒவ்வொன்றையும் சாத்தியமுள்ளதாகவே பார்த்து, அதை துணிச்சலாக எதிர்கொள்வது. இத்தகைய ஒரு மனோநிலையைக் கொண்ட இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக இருக்கும் விராத் கோலி, நவீனகால நாயகனாக மிளிர்கிறார்.
இந்திய மக்கள் கிரிக்கெட்டை விரும்பும் விதம், எனக்கு எப்போதுமே ஆச்சர்யமூட்டக்கூடியது. நான் கடந்த 1986ம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, உள்ளூர் மக்களின் கிரிக்கெட் காதலைக் கண்டு பிரமித்துப் போனேன்” என்றுள்ளார் வாஹ்.