திருப்பதி: நாளை திருப்பதி கோவிலில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் குவிவார்கள் என்பதால், தரிசனத்துக்கு பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் போர்டு வெளியிட்டு உள்ளது. இதையொட்டி நாளை (27ந்தேதி) ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இதையொட்டி, நாளை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதை முன்னிட்டு 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. இதனால், 27-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. எனவே இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.