ஜூலை மாதம் தெற்கு சூடானின் தலைநகரம் ஜூபாவில் ஏற்பட்டிருக்கும் கலவரத்தை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறையின் முயற்சியினால் இந்தியர்களை காப்பாற்ற விமானங்கள் அனுப்பபட்டன. தலைநகரத்தில் 550 இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்தது ஏனினும் அதில் 156 இந்தியர்களே நாடு திரும்ப முடிவுசெய்தனர் மற்றவர்கள் தெற்கு சூடானையே தேர்வு செய்தனர்.
ஜுலை 14, 2016 மதிய நேர அளவில் மூவர்ண குறியீட்டோடு விமானம் ஒன்று ஜூபா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அவ்விமானத்தின் வாயிலில் நின்றிருப்பவர்கள் யாரெனில், அந்நகரத்தின் முக்கிய தொழிலதிபர்கள், நிலபிரபுக்கள் மற்றும் வியாபாரிகள். விமானத்திலிருந்த நபர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில், விமானம் புறப்பட கட்டளை வந்தவுடன், அவர்கள் விமானத்திலிருந்து பின்நோக்கி நடந்தனர்.
இந்திய வெளியுறவுத் துறையால், தெற்கு சூடானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் “சங்கட் மோச்சான்” செயல்திட்டத்திற்காக இந்தியாவால் ஜூபாவுக்கு அனுப்பப்பட்ட இரண்டு விமானங்களில் ஒன்றுதான் அது. மொத்தமிருந்த 550 இந்தியர்களில் 156 பேர் மட்டுமே நாடு திரும்ப முடிவு செய்தனர். இரண்டாவது விமானத்தில் 11 பேர் மட்டுமே ஏறினர் எஞ்சியோர் தெற்கு சூடானையே தேர்ந்தெடுத்தனர்.
கடந்த ஒரு வாரமாக அங்கு நடக்கும் அசாதாரணமான சூழ்நிலையே இதற்கு காரணம். ஜூபாவில் தற்போது அந்நாட்டின் அதிபர் சால்வ கிர் தலைமையிலான அரசப்படைகளுக்கும், அந்நாட்டின் துணை அதிபர் ரிக் மக்சர் ஆதரவாளர்களுக்கும் இடையே நடக்கும் சண்டையினால் இதுவரை நூற்றுக்கணக்கானோர் மாண்டுள்ளனர். இது கடந்த மூன்று வருடங்களில் நடக்கும் இரண்டாவது கிளர்ச்சியாகும். 2011 ஆம் ஆண்டு சூடானில் சுதந்திரமடைந்ததிலிருந்தே கிர் மற்றும் மக்சரிடையே அவ்வப்போது வரும் போட்டியின் காரணமாக இம்மோதல்கள் அரங்கேறி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களின் முக்கிய புள்ளிகளை இராணுவத்தினர் கொன்றதையடுத்து, அவரின் ஆதரவாளர்கள் ஜூலை 8 முதல் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். ஜூலை 11 போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும் அங்கு இயல்புநிலை திரும்பவில்லை. அதிபரின் தற்போதைய இருப்பிடம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
“என்ன செய்வது, இதுதான் தெற்கு சூடான்” என்றார் சம்பக் டங்.இந்தியரான டங் 2006 ஆம் ஆண்டு அவர் ஜூபாவுக்கு வந்தவுடன் ஆரம்பித்த “டைனமிக் கன்ஸ்டரக்சன்” என்னும் நிறுவனத்தின் தலைவர். முன்னதாக அவர் கென்யாவில் கார்மன்டஸ் வைத்திருந்தார். 2000 ஆண்டின் நடுவில் தெற்கு சூடானில் குடியேறினார், 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்ததிற்கு பிறகு டங்கு போல பல தொழிலதிபர்கள் ஜூபாவில் குடியேறினர். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத அந்நகரத்தை பல நிறுவனங்கள் கட்டமைத்தனர். 2011 ஆம் ஆண்டு சூடானில் இருந்து தெற்கு சூடான் பிரிந்து சுதந்திர நாடானபோதிலும் அங்கு புரட்சிகள் ஓயந்தபாடில்லை.
அவர்கள் ஜூபாவுக்கு வருவதற்கு முன்னதாக தான்சானியா, கென்யா மற்றும் உகான்டாவில் அது போலபல பாடங்களை பெற்றுள்ளனர். 1990ல் இந்தியாவில் ஏற்பட்ட தாராள மயமாக்காமல் கொள்கையினாலும், குறைவான போட்டியின் காரணமாகவும் மேற்கு ஆப்பரிக்காவில் இந்தியர்களின் கை ஓங்கியது.