மேற்கு வங்கத்தில் சமூக வலைதள பதிவு காரணமாக இரு தரப்பினரிடையே மோதல்!

கொல்கத்தா,

மூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட சர்ச்சையான பதிவு காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக மோதல் கலவரமாக மாறி, வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன

மேற்குவங்க மாநிலம் படுரியா என்ற இடத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட படத்தால் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு கலவரமாக மாறியது.

குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்தும் விதமாக வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் சர்ச்சை பதிவிட்டதைத் தொடர்ந்து மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது

இந்த கலவரத்தின்போது,  போலீஸ் வாகனங்களுக்கும் கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இந்தக் கலவரத்தால் அந்தப் பகுதி முழுவதும் பதற்றான சூழல் நிலவி வருகிறது

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அந்தப் பகுதிக்கு துணை ராணுவப் படையை அனுப்பியுள்ளது.

அவர்கள் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து கலவரக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர்

மேலும், கலவரம் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்காக அந்தப் பகுதியில் துணை ராணுவப் படையினர் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

கலவரம் காரணமாக அந்த பகுதியில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது


English Summary
violence in West Bengal over Facebook post is an ugly stain of communal politics