இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பாக புதிய அரசியல் சீர்திருத்த மசோதா கொண்டு வந்ததை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டம் வன்முறையாக வெடித்தது.

பாகிஸ்தானின் சட்ட அமைச்சர் ஜாகித் ஹமீத், தேர்தல் சட்டவிதிமுறைகள் தொடர்பாக புதிய அரசியலமைப்பு திருத்த மசோதாவை கடந்த 21-ம் தேதி கொண்டு வந்தார். பாகிஸ்தான் நாடாளுமன்ற நேஷனல் அசெம்பிளியின் இரு அவைகளும் இந்த மசோதாவை நிராகரித்தன. இது பாகிஸ்தானில் மத துவோஷ சட்டத்தை மீறியதாகவும் மத அமைப்புகள் புகார் கூறின.

இதனை கண்டித்து பாகிஸ்தானில் தெக்ரிக்- ஐ- கதம்-ஐ- நவுவாத், தெக்ரிக் -ஐ- லபாயிக்-யா ரசூல் அல்லா, சன்னி தெக்ரிக் பாகிஸ்தான் ஆகிய இஸ்லாமிய அமைப்புளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கடந்த கடந்த 2 வாரங்களாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் , ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சாலையை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.இது தொடர்பாக இஸ்லாமபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசன் இக்பால் கோர்ட் அவதிக்குள்ளாயினர். உடனடியாக மறியல் போராட்டத்தை 24 மணிநேரத்திற்குள் முடிவுக்கொண்டு வர உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கண்டிப்புகாட்டியது.

இதையடுத்து மறியல் செய்தவர்கள் மீது போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. பாகிஸ்தான் ஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களுக்கும் கலவரம் பரவியது. கலவரக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர், போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தில் 2 பேர் பலியாகினர். 150 பேர் காயமடைந்தனர். .உள்துறை அமைச்சர் ஜாகித் ஹமீத் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.கலவரம் தீவிரமடைந்ததையடுத்து பாகிஸ்தானில் சமூக ஊடங்கள் முடக்கப்பட்டன. டி.வி.சானல்கள் ஒளிபரப்பும் நிறுத்த உத்தரவிட்டப்பட்டது.

இந்த வன்முறை சம்பவத்திற்கு இந்தியா தான் காரணம் என அந்நாட்டு அமைச்சர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசன் இக்பால் கூறுகையில், ‘‘பாக்.கில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கலவரக்காரர்கள் இந்தியாவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நாடு முழுவதும் கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும்’’ என்றார்.