சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம்  பண்டிகைகளையொட்டி,  சதர்ன்  ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 7 ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதபோல  கேரள மக்களின் பண்டிகையான ஓணம்  பண்டிகை வயநாடு பேரிடர் காரணமாக சிறப்பாக கொண்டாடப்படாத  நிலையில்,  ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில்,  செப்டம்பர் 15ந்தேதி திருவோணத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி, பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி,  திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கும், மங்களூரில் இருந்து கொல்லத்திற்கும், எர்ணாகுளத்தில் இருந்து எலங்கனா பகுதிக்கும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இன்று இயக்கப்படவுள்ளது. (ரயில் எண் 06040)அந்த வகையில் இன்று இரவு 10:20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயிலானது அடுத்த நாள் காலை 11:25க்கு தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த ரயிலானது தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருச்சி மதுரை கோவில்பட்டி வழியாக நெல்லையை சென்று சேருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல ஓனம் பண்டிகையை யொட்டி மங்களூரில் இருந்து கொல்லத்திற்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. (ரயில் எண் 06047/ 06048 )இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி 16தேதி மற்றும் 23ஆம் தேதி ஆகிய தேதிகளில் இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. இதே போல மறுமார்க்கத்திலும் இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. இந்த ரயில் மங்களூர், காசர்கோட், கண்ணூர், தலச்சேரி, திருச்சூர், கோட்டயம் வழியாக கொல்லத்தை வந்து சேருகிறது

இதே போல எர்ணாகுளத்தில் இருந்து எலங்கனா பகுதிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ரயில் எண் 06101/ 06102)இந்த ரயில் செப்டம்பர் 4 மற்றும் 6ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இதே போல மறுமார்க்கத்திலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலானது எர்ணாகுளம், திருச்சூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எலங்கானா பகுதிக்கு சென்று சேர்கிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.