ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் நேற்று முதல் திருவண்ணாமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி கலங்கல், ஓடை, சிற்றாறு மற்றும் துணை ஆறுகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து அணைகளும் நிரம்பி வழிகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தில் அபாய அளவுக்கு அதிகமாக நீர் செல்வதால் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் – செஞ்சி சாலை, விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலை, விழுப்புரம் – கடலூர், விழுப்புரம் – திருச்சி ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.தவிர பள்ளி கல்லலூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர்.