பொதுவாக, ஹீரோயினை தேடிக்கண்டுபிடிக்கத்தான்  தயாரிப்பாளரும், இயக்குநரும் படாதபாடுபடுவார்கள். ஆனால்  கௌதம்மேனன் இயக்கத்தில் தற்போது தனுஷ்  நடித்துவரும் படம், “ என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் வேறு மாதிரி அலைச்சலாம்.
அதாவது படத்தில் வில்லன் கேரக்டருக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டாம். ஆகவே அதற்கேற்ற வில்லன் வேண்டும் என்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கிடையே, தனுஷ் ஒரு ஐடியா சொன்னாராம்.

கௌதம் - தனுஷ்
கௌதம் – தனுஷ்

அதாவது இயக்குநர் கௌதம் மேனனே அந்த வில்லன் கேரக்டரில் நடிக்கலாம் என்பதுதான் ஐடியா.
ஆனால், “எனக்கு நடிப்பெல்லாம் சரிவராது” என்று கௌதம் மறுத்துவிட்டாராம். ஆனால் தனுஷ், விடாப்பிடியாக கௌதமை நடிக்கச் சொல்கிறாராம். கௌதம் யோசிக்கிறாராம்.
பார்ப்போம்.. தமிழுக்கு புது வில்லன் கிடைக்கிறாரா என்று!