தராபாத்,

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

 

கோட்டா சீனிவாசராவி தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகர் ஆவார்.  இவர் ஏராளமான தெலுங்கு திரப்படங்களில் வில்லனாக தொன்றி உள்ளார்.  மேலும் தமிழிலும் நடிகர் விக்ரமின் சாமி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமாகி மேலும் பல்வேறு தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கிட்டத்தட்ட 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.  அண்மைக்காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக  கோட்டா சீனிவாச ராவிசிகிச்சைப் பெற்று வஜுறார்.

தற்போது கோட்டா ஸ்ரீனிவாச ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோட்டா சீனிவாசராவி  மறைவு அவர் குடும்பத்தினரை மட்டுமின்றி திரைத்துறை வட்டாரத்திலும் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.