பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் நேற்றிரவு சென்னையில் காலமானார்.
வேட்டையாடு விளையாடு படத்தில் கமலஹாசனுக்கு டப் கொடுத்ததன் மூலம் பிரபலமானவர் டேனியல் பாலாஜி.

ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்த சித்தி தொலைக்காட்சித் தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக அறிமுகமான பாலாஜி தமிழ் திரையுலகில் டேனியல் பாலாஜி என்ற பெயருடன் நடிக்கத் துவங்கினார்.
நடிகர் ஸ்ரீகாந்தின் ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான டேனியல் பாலாஜி தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, பிகில் உள்ளிட்ட தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினரான டேனியல் பாலாஜி தமிழ், மலையாளம் தவிர கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
48 வயதாகும் டேனியல் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.