சென்னை; தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்  நடைபெற்று வரும் நிலையில், கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு – நாட்டுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருகிறது என்றவர்,  மகளிர் உரிமை தொகை குறித்து கிராம சபை கூட்டத்தில் காணொளி மூலம்  பங்கேற்று உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம் இன்று (அக்டோபர் 11) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.

நாடு முழுவதும்  ஆண்டுக்கு 6 கிராமசபை  கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும்.  அதன்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்.  மத்தியஅரசின் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களிலும் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு வசதிகள்  கிடைத்துள்ளன. இதையடுத்து    11 ஆயிரத்து 100 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் இணைப்புகள் இருந்தாலும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து,   இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றி வருகிறார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் தொடங்கியது. கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றி வருகிறார். நாட்டுக்கே வழிகாட்டும் ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது. என்றைக்கும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவேண்டும் என வழிவகுத்தவர் அண்ணா. என்றைக்கும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவேண்டும் என்பதை விதைத்தவர் அண்ணா. 10,000 கிராமங்களை ஒன்றிணைத்து முதன்முறையாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இதுபோன்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை. தமிழ்நாட்டிலேயே 10,000க்கும் மேற்பட்ட ஊராட்சி நிலையங்களை இணையம் மூலமாக இணைத்துக் கிராம சபைக் கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை என்று பெருமிதம் தெரிவித்தவர்,  கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன என்றார். இந்தியாவில் எந்தவொரு முதலமைச்சரும் இதுபோல கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டதில்லை என்றவர், தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே வழி காட்டி என்றார்.

பணத்தை தண்ணீராக செலவழிப்பதாகச் சொல்வார்கள். ஆனால், தண்ணீரைத்தான் பணம் போல் செலவழிக்க வேண்டும்”

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறி மீட்க வேண்டும்.

மகளிர் சுய உதவி குழுக்களின் அடுத்தக் கட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  என்றவர்,  பெண்கள் முன்னேற்றத்தில் விடியல் பயண திட்டத்தால் மிகப்பெரிய பயன் உள்ளது என்றும் கிராம சபை கூட்டங்களில் முதல்வர் தெரிவித்தார்.