சென்னை: திமுக எம்.எல்ஏ புகழேந்தி காலமான நிலையில், அவரது விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலம் அறிவித்து உள்ளது.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த 6ந்தேதி திடீரென உடல்நலம்பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவால்,  விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.  இதையடுத்து, தேர்தல் ஆணையம் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்கும்.

தற்போது மக்களவைக்கான தேர்தல்  7 கட்டமாக நடைபெற உள்ளதால்,. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகே,   விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.